தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள்!! பிள்ளைகளின் முழு படிப்பை ஏற்கிறேன்!! சேவாக் உறுதி

Default Image

உயிரிழந்த நமது வீரர்களின் பிள்ளைகளின் முழு படிப்பை ஏற்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர்  சேவாக்  தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Image result for sehwag crpf

இந்நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், உயிரிழந்த வீரர்களுக்கு என்ன செய்தாலும் ஈடாகாது. ஆனால்  குறைந்தபட்சம் என்னால், உயிரிழந்த நமது வீரர்களின் பிள்ளைகளின் முழு படிப்பையும் என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் முழுமையாக வழங்கிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்