டி20 கிரிக்கெட்டில் இத்தனை விக்கெட்டுகளா..? மிரட்டல் சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல்.!
டி20 கிரிக்கெட்டில் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (நேற்று) ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அருமையாக பந்துவீசி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, 4 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டி போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதைப்போல ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 170-வது விக்கெட்டுகளை வீழ்த்தி அதிலும் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
மேலும், இவருக்கு அடுத்த படியாக டி-20 போட்டிகளில் அதிகம் விக்கெட் எடுத்த 2-வது வீரர் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், 288 விக்கெட்டுகளுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.