அப்போ இது உண்மை தானா ? பிசிசிஐ எடுத்தது தவறான முடிவா ?

Shreyas_BCCI [file image]

BCCI : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மானாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய அணி விளையாடிய இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் இருந்து பேட்டிங் ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அவர் நீக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகு அவரை இந்தியாவின் உள்ளோர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு அவரை பிசிசிஐ பரிந்துரை செய்தது. ஆனால் ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் வலி இருப்பதாக கூறி ரஞ்சி கோப்பையில் பங்கேற்காமல் இருந்தார்.

Read More :- Ranji Trophy : 42-வது முறையாக சாம்பியன் ..! 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!

இதனால் 2024-2025 ஆண்டிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்களை பிசிசிஐ சேர்க்காமல் விட்டது. இதை இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் அப்போது இருவருக்கும் பிசிசிஐ பாடம் புகட்டியதாக கூறி வந்தனர். மேலும், இதன் விளைவாக ஷ்ரேயஸ் ஐயர் ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக அரை இறுதி மற்றும் இறுதி போட்டியில் விளையாடினார்.

Read More :- BCCI : இஷான் – ஷ்ரேயஸுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ ..! சொன்னதை செஞ்சுக்காட்டிய ஜெய்ஷா ..!

ரஞ்சிகோப்பை இறுதி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்து தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்து இருந்தார். ஆனால், அந்த இறுதி போட்டியில் அவர் முதுகு வலியால் அவதிபட்டார் . இதனால் ஷ்ரேயஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங்கின் போது அவர் மூன்று மணி நேரம் களத்திற்கும் வரவில்லை. அதே நேரம், இறுதி போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் அவர் களத்திற்கு வரவில்லை. தற்போது, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவருக்கு ஏற்படும் இந்த முதுகு வலிக்கு அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

Read More :- இனிமேல் இதுதான் சம்பளம் ..! இஷான் – ஷ்ரேயஷால் இளம் வீரர்கள் உற்சாகம் ..!

முதலில், இதே தேசிய கிரிக்கெட் அகாடமி தான் ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒன்றும் இல்லை என கூறி இருந்தது. இதன் விளைவாக தான் பிசிசிஐ அவர் வலி இல்லாமலே ரஞ்சி கோப்பையை புறக்கணித்ததாக கூறி கோபத்தில் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது. தற்போது அவருக்கு உண்மையிலேயே முதுகு வலி இருப்பது தெரிய வந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ-யை மீது கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனை தொடர்ந்து பிசிசிஐ ஷ்ரேயஸ் ஐயரின் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்