அப்போ இது தான் காரணமா? கேப்டன் பதவியிலிருந்து விலகினார் வனிந்து ஹசரங்கா .!
வனிந்து ஹசரங்கா : இலங்கை டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சில காரணங்களுக்காக தற்போது விலகி இருக்கிறார் வனிந்து ஹசரங்கா.
கடந்த 6 மாத காலமாக இலங்கை அணியின் டி20 அணியின் கேப்டனாக வனிந்து ஹசரங்கா செயலாற்றி வந்தார். இவரது தலைமையில் இலங்கை அணி மொத்தம் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதிலும் இந்த வருட தொடக்கத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரை ஹஸரங்கா தலைமையிலான இலங்கை அணி வென்றது.
மேலும், கடந்த மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி குரூப் சுற்றிலேயே தோல்விகளை தழுதி தொடரை விட்டு வெளியேறியது. தற்போது, டி20 இலங்கை அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகி இருக்கிறார். அவர் அவரது ராஜினாமா கடிதத்தில், “நடைபெற்ற டி20 தொடரில் இலங்கை அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.
ஒரு கேப்டனாக எனக்கும் அணிக்கும் அது ஏமாற்றம் அளிக்கிறது. குறைவானபோட்டியே விளையாடியிருக்கிறோம் அதனால் மன்னியுங்கள் எனகூறி தோல்வியை இப்படி ஒரு சாக்கு சொல்ல விரும்பவில்லை. ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை இலங்கைக்கு எப்போதும் கொடுத்து கொண்டிருப்பேன். நான் எப்போதும் போல் வழக்கம் போல் என் அணி மற்றும் என் தலைமைக்கு ஆதரவளிப்பேன், அவர்களுடன் உருதுணையாக நிற்பேன்”, என்று அதில் கூறி இருக்கிறார்.
இதனால், வரும் கால இளைஞர்களை கருத்தில் கொண்டு ஹசராங்க இந்த முடிவை எடுத்துள்ளார் என ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அதே போல இம்மாத இறுதியில் இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கும் இலங்கை அணியின் புதிய கேப்டனை இலங்கை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிப்பார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது.