டெல்லியை கிழித்து தொங்கவிட்ட ஸ்மிருதி மந்தனா! த்ரில் வெற்றியை பதிவு செய்த பெங்களூர்!
டெல்லிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா 82 ரன்கள் எடுத்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

வதோதரா : மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
நேற்று (பிப்ரவரி 17) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 19.3 ஓவர்கள் முடிவில் தங்களுடைய அணைத்து விக்கெட்களையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, சாரா பிரைஸ் 23 ரன்கள் எடுத்திருந்தனர். அதைப்போல பெங்களூர் அணியின் பந்துவீச்சில் ரேணுகா சிங், ஜார்ஜியா வேர்ஹாம் இருவரும் சிறப்பாக செயல்பட்டு தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
டெல்லி அணி 141 ரன்கள் எடுத்து 142 இலக்காக பெங்களூர் அணிக்கு நிர்ணயித்த நிலையில், விரைவாக போட்டியை முடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இறங்கிய தொடக்க ஆட்டக்கார வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, டேனியல் வயட்-ஹாட்ஜ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே போட்டியை முடித்துவிடுவார்களோ என்கிற வகையில் போட்டி சென்று கொண்டு இருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால், டேனியல் வயட்-ஹாட்ஜ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்மிருதி மந்தனாவும் சிறிது நேரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு எலிஸ் பெர்ரி 7 *, ரிச்சா கோஷ் 11 * இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 16.2 ஓவர்களில் 12 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
பெங்களூர் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அணியின் கேப்டனான ஸ்மிருதி மந்தனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் அவருடைய பேட்டிங்கை பாராட்டி வருவது போல மற்றோரு புறம் அவருடைய கேப்டன் சியும் அருமையாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.