பெண்களுக்கான டி20 தொடர் துபாயில் நடைபெற்றது. இன்றைய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இப்போட்டியில் முதலில் இறங்கிய டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே நிதானமாக விளையாடி வந்த தியான்ட்ரா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்தார். இறுதியாக டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்தனர்.
119 ரன்கள் இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக ஜெமிமா, சாமரி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சாமரி 6 ரன்னில் வெளியேற பின்னர் இறங்கிய தனியா பாட்டியா 14 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.
இதைத்தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 102 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…