ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் சதமடித்து சரித்திரம் படைத்த ஸ்மிரிதி மந்தனா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெறு பந்து வீச முடிவு செய்தது.
முதலில் இறங்கிய இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சிறப்பான சதம் அடித்து வரலாறு படைத்துள்ளார். பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஸ்மிருதி பெற்றுள்ளார்.
25 வயதான இடது கை பேட்ஸ்மேன் ஸ்மிருதி பிங்க் பால் டெஸ்டின் இரண்டாவது நாளில் 170 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். 52 வது ஓவரின் ஐந்தாவது பந்தில் எலிஸ் பந்தை பவுண்டரி அடித்து மந்தனா டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.
சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி127 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதில் 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தற்போது இந்திய அணி 84 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளனர்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…