ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் சதம் விளாசல்: விண்டிஸ் அணிக்கு 318 ரன் இலக்கு..!

Published by
murugan

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில்  இந்திய அணியின் மகளிர் படையும் , வெஸ்ட்இண்டீஸ் அணி மகளிர் படையும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த யாஸ்திகா பாட்டியா 7 வது ஓவர் வீசிய ஷகேரா செல்மனிடமே கேட்சை கொடுத்து 31 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 5 ரன் எடுத்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர், களமிறங்கிய  தீப்தி சர்மா வந்த வேகத்தில் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், இந்திய அணி 78 ரன்னில் 3 விக்கெட்டை இழந்தது. அணி மோசமான நிலையில் சென்றபோது மத்தியில் ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார்.  இதைதொடர்ந்து, ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் இருவரும் கூட்டணி அமைத்து வெஸ்ட்இண்டீஸ் அணி அணியை திணறவைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்களின் விக்கெட்டை பறிக்க வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகள் திணறினர்.

சிறப்பாக விளையாடி வந்த ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி 123 ரன் எடுத்து குவித்தார். இதில் 13 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும். அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். பின்னர்,  இறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற  ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 107 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 317 ரன்கள் எடுத்து. வெஸ்ட்இண்டீஸ் அணி 318 ரன் என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Published by
murugan
Tags: CWC22WIvIND

Recent Posts

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

அமைச்சர் பொன்முடியின் ‘கொச்சை’ பேச்சு! “ஏற்றுக்கொள்ள முடியாது!” கனிமொழி கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…

43 minutes ago

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

1 hour ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

1 hour ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

2 hours ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

3 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

4 hours ago