மூன்றாவது டெஸ்ட் போட்டிஸ் ஸ்மித் செய்த காரியம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இந்திய, ஆஸ்திரேலிய இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், பொதுவாக பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஸ்டம்புகளை மறைக்கும் வகையில் தங்களுக்கு ஏற்ப ஸ்டம்பிற்கு முன் தங்களது கால்களை வைத்து கோடு போட்டு விளையாடுவார்கள். இதை கார்ட் என்று கூறப்படுகிறது. இந்த கார்ட் மூலம் எல்பிடபிள்யூ, போல்டை தவிர்க்க உதவுகிறது.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் பண்ட் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்வதைப் பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்மித் அவரை திசை திருப்ப பிரேக் நேரத்தில், ரகசியமாக ஆடுகளத்தில் வந்து பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை நீக்கி விட்டு, ஸ்மித் தனது காலால் பக்கத்தில் இன்னொரு கோட்டை போட்டு வைத்தார். பண்ட் குழப்ப அடையவேண்டும் வேண்டும் என்பதற்காக ஸ்மித் இதை செய்துள்ளார்.
இருப்பினும், பந்த் பின்னர் பேட்டிங் செய்ய வந்தபோது, அம்பயரிடம் மீண்டும் அடையாளத்தை மாற்றி அமைக்க சொன்னார், ஸ்மித்தின் இந்த மோசமான செயலைப் பார்த்த பிறகு இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் வீரரின் முகம் தெளிவாகக் தெரியவில்லை, ஆனால் அவரது ஜெர்சி எண் 49 தெரியவந்தது. ஸ்மித் அணிந்துள்ளது ஜெர்சி எண் 49 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் புஜாரா, பண்ட் இருவரும் கூட்டணி அமைத்து 148 ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரிஷாப் பந்த் 118 பந்தில் 97 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாப் பந்த் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார் அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். புஜாரா 205 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…