#IPL2021: அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. ஐபிஎல் தொடரில் இருந்து டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் விலகல்?

ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் உட்பட ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடர் எந்தவித தடையுமின்றி நடைபெற்று வருகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஹைதராபாத் அணியின் “யாக்கர் மன்னன்” நடராஜனும் வெளியேறினார்கள். மேலும், கொரோனா அச்சம் காரணமாக டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும், ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா வீரர்களான சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகிய 3 பேர் வெளியேறிய நிலையில், தற்பொழுது டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறவுள்ளது, ரசிகர்களிடையே வருத்தமளிக்கிறது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025