SLvIND : நாளை மறுநாள் இந்திய அணி இலங்கை அணியுடன் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது, இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களால் சற்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இந்திய அணி வரும் ஜூலை-26 ம் தேதி அதாவது நாளை மறுநாள் சுற்று பயணத்தொடர் விளையாடவுள்ளது. இந்த சுற்று பயணத்தொடரில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளனர். மேலும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு அவருக்கு கீழ் இந்திய அணி விளையாட போகும் முதல் சுற்று பயண தொடர் இதுவாகும்.
இதனால், கம்பீர் எப்படி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த இந்திய அணியை கையாள போகிறார் என்பதே இந்த தொடருக்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும், இந்த சுற்று பயணத்தொடரில் விளையாட இருக்கும் டி20 போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதனால் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவின் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை காணவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
அதே நேரம் ஒரு நாள் தொடருக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் ஓய்வுக்கு பிறகு திரும்பி இருக்கின்றனர். ரோகித் சர்மா கேப்டனாக தொடர இருக்கிறார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டுக்குமே சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதல் டி20 போட்டி வருகிற 27ம் தேதி இரவு 7 மணிக்கு பல்லேகலேவில் நடைபெற உள்ளது. அதற்கடுத்த 2 டி20 போட்டிகளும் ஜூலை-28 மற்றும் ஜூலை-30ம் தேதிகளில் அதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7-ம் தேதிகளில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.
நடைபெற இருக்கும் இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் சோனி ஸ்போர்ட்ஸ் 10 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனலில் தமிழில் பார்க்கலாம். மேலும், மொபைலில் சோனி லிவ் ஆப்பிலும் இந்த போட்டிகளை காணலாம்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…