SLvsIND : ‘திக் திக்’..சரிக்கு சமமாய் மோதிய அணிகள்! டிராவில் முடிந்த முதல் போட்டி ..!
SLvsIND : இந்தியா மட்டும் இலங்கை அணி இடையே இன்று தொடங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது இலங்கையில் உள்ள கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க வீரர்களாக பத்தும் நிசான்காவும், அவிஷ்கா பெர்னான்டோவும் களமிறங்கினார்கள். எதிர்பாராத விதமாக பெர்னாண்டோ 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து குசல் மெண்டிஸ்14 ரண்களுக்கும் சமரவிக்ரமா 8 ரன்களுக்கும், அசலங்கா 14 ரன்களுக்கும் ஜனித் லியனகே 20 ரன்களும் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த தொடக்க வீரரான நிசங்காவும், துனித் வெல்லலகே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். சிறப்பாக விளையாடிய நிசங்கா 56 ரன்களுக்கும், வள்ளலாகி 67 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 50 ஓவருக்கு இலங்கை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணி களமிறங்கியது. எப்போதும் போல தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள்.
அதன்பிறகு கில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அவரைத் தொடர்ந்து விராட் கோலி 24 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 58 ரன்கள் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் கே.எல்.ராகுல், அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து ஒரு நல்ல ஸ்கோரை அணிக்கு எடுத்து கொடுத்தனர்.
இருவரும் 10 ரன்கள் இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இலக்க போட்டி மிகவும் த்ரிலாக மாறியது. அக்சர் பட்டேல் ஆட்டமிழக்க 197 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனால் ஒரு பக்கம் குல்திபியாதவன் மறுமுனையில் சிவம் தூபியவும் அணிக்காக விளையாடினார்கள். பொறுமையாக தட்டி தட்டி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் குல்தீப் யாதவ் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
அவருக்கு பின் சிவம் துபேவும் 25 ரன்களுக்கு ஆட்டம் இழக்க போட்டி விறுவிறுப்பின் உச்சத்தை தொட்டது. இதனால் இந்திய அணி 230 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது வெறும் ஒரு ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என கடைசி விக்கெட்டுக்கு களம் களமிறங்கினார் அர்ஷ்தீப் சிங்.
ஆனால் துரதிஷ்டவசமாக அடுத்த பந்தே அர்ஷதிப் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 47.5 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் விளைவாக இந்த போட்டியானது டிராவில் முடிந்தது.
மேலும் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரானது யாரும் முன்னிலை பெறாமல் இருந்தனர். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது 50 ஓவர் போட்டி வரும் ஆகஸ்ட்-4 ம் தேதி நடைபெறவுள்ளது.