SLvsIND : தொடரை இழந்த இந்திய அணி ..! 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற இலங்கை..!
SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் கடைசி மற்றும் 3-வது போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியானது கொழும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி முதலில் இலங்கையின் தொடக்க வீரர்கள் களமிறங்கி விளையாடினார்கள். இலங்கையின் முதல் 3 விக்கெட்டுக்கு களமிறங்கிய 3 வீரர்களும் அதிரடியாக விளையாடி இலங்கையின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டுச் சென்றனர்.
அதன்படி நிசன்ங்கா 45 ரன்களும், அவிஷ்க பெர்னாண்டோ 96 ரன்களும், குசல் மெண்டிஸ் 59 ரன்களும் எடுத்த ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து இறுதி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 23 ரன்களை அடித்தார். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவருக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினார்கள். அதில் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு முன் தொடக்க வீரரான கில் 6 ரன்களுக்கு வெளியேறினார்.
அவர்களைத் தொடர்ந்து எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு அணியை கொண்டு சென்றனர். அதன்படி விராட் கோலி 20 ரன்கள், ரிஷப் பண்ட் 6 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 8 ரன்களும், அக்சர் பட்டேல் 2 ரன்களும், ரியான் பராக் 15 ரன்களும், சிவம் துபே 9 ரன்களும் எடுத்தனர்.
8 விக்கெட்டுகள் போன பிறகும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று சிறிது நேரம் விளையாடினார். அவருடன் குல்தீப் யாதவும் நிலைத்து விளையாடினார். அதன்படி வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவரை தொடர்ந்து அடுத்த பந்தே குல்தீப் யாதவும் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக இந்திய அணி 26.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் விளைவாக இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
இலங்கை அணியின் சார்பாக துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மேலும் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் 27 வருடங்களில் முதல் முறை இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி இருக்கிறது இலங்கை அணி.