#SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .!
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்ய இலங்கை அணி களமிறங்கியது.
டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..!
இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பதும் நிஷங்கா 139 பந்துகளில் 210* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார்.
அதன் பிறகு 382 என்ற இமாலய இலக்கை அடைந்தால் வெற்றி என்பதுடன் ஆப்கான் அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்திலிருந்தே சரிவை கண்டது. எந்த வீரரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இலங்கையின் பந்து வீச்சுக்கு திணறியது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 55-5 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. அதன் பிறகு 6 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் முகமது நபி இருவரும் இணைந்து நிதானத்துடன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை நிலை குலைய வைத்தனர்.
முகமது நபி 130 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 115 பந்துகளில் 149* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரின் ஆட்டத்தால் அந்த அணி மோசமான தோல்வியிலிருந்து தப்பித்தது. இருந்தும் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்த சிறப்பான ஆட்டம் கைகொடுக்கவில்லை.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தோல்வி அடைந்தாலும் இந்த போட்டி ஒரு மதிப்புமிக்க தோல்வியாக அமைந்துள்ளது.