WIvSL: டாஸ் வென்ற இலங்கை.. ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பழிவாங்குமா?
வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் வீரர்கள்:
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஜேசன் முகமது, டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்டு (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப், அகீல் ஹொசைன்.
இலங்கை: திமுத் கருணாரத்னே (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பாதம் நிசங்கா, தினேஷ் சந்திமல் (விக்கெட் கீப்பர்), ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஷென் பண்டாரா, காமின்டு மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன்.