SLvAUS : நிதானமாக விளையாடிய இலங்கை! ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு!

ஆஸி.க்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்ககளை குவித்துள்ளது இலங்கை அணி.

Sri Lanka vs Australia 2nd ODI

கொழும்பு : இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி,  50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி டெஸ்டில் 2 போட்டிகளிலும் வென்றது போல இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது. அதன்படி, இலங்கை அணி ஏற்கனவே தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் தொடக்கம் மெதுவாக இருந்தது.

நிதானமாக விளையாடி வந்த  இலங்கை அணி வீரர் பதும் நிஸ்ஸங்கா 6 ரன்களில் ஆரோன் ஹார்டியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், நிஷ்சய் மதுஷங்கா (51) மற்றும் குசால் மெண்டிஸ் (101) முதல் இன்னிங்ஸை நிலைநிறுத்தி 98 ரன்கள் சேர்த்தனர். குசால் மெண்டிஸ் அற்புதமாக பேட்டிங் செய்து 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட 101 ரன்கள் எடுத்தார்.

மிடில் ஆர்டரில் கமிந்து மெண்டிஸ் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தனர், ஆனால் கேப்டன் சரித் அசலங்கா (78) மற்றும் ஜனித் லியனகே (32) இறுதி ஓவர்களில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து இலங்கை அணியின் அதிக ஸ்கோர் செய்ய வழி வகுத்தனர். அஸ்லங்கா 66 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், லியனேஜ் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 281 ஆகக் கொண்டு சென்றார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருந்தாலும்  ரன்களை கொடுத்து கோட்டை விட்டனர். ஆனால், சீன் அபோட், பென் துவார்ஷுயிஸ், ஆரோன் ஹார்டி மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இப்பொது, 282 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி, 14வது ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது களத்தில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் பார்ட்னர் ஷிப் போட்டு நிதானமாக விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்