சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை! வார்னர், மார்ஷ் அதிரடியான சதங்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இன்றைய 18-ஆவது லீக் போட்டியில் பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு பாபர் அசாம் முடிவு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியான ஆட்டத்தை தொடங்கினர்.

தொடக்கத்தில் வார்னர் 13 ரன்னில் இருந்த போது அப்ரிடி பந்து வீச்சில் டாப் எட்ஜ் ஆனது. அந்த கேட்ச்சை ஷதாப் கானுக்கு பதிலாக களமிறங்கிய உஸ்மா மிர் அந்த வாய்ப்பை தவறவிட்டார். இதில் இருந்து இருவரும் பாகிஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை விளாசி தள்ளினர். சின்னசாமி ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை பொழிந்து வருகிறது.  இதனால் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அடுத்தடுத்து சதத்தை அடித்து அசத்தினர்.

அதாவது, ஒருநாள் போட்டியை டி20 மேட்ச் போல் விளையாடிய இருவரும் அதிரடியாக சதங்களை அசத்தியுள்ளார்கள். சதம் அடித்தும் விடாமல் இருவரும் மாறி மாறி பாகிஸ்தான் பவுலர்களை சொம்சம் செய்தனர். இதில்  கேட்சிகளையும் தவறவிட்டால், பாகிஸ்தான் பவுலர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இறுதியாக, அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் ( 10 பவுண்டரி, 9 சிக்ஸ்) 121 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் நம்பிக்கை பவுலரான ஷஹீன் அப்ரிடி ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

இதனைத்தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ஷஹீன் அப்ரிடி ஓவரிலேயே டக் அவுட் ஆனார். ஆனால், மறுபக்கம் வார்னர் அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 35 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் 128 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். மறுபக்கம் ஸ்மித் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து அதிரடியாக விளையாடினால் ஆஸ்திரேலிய அணி 400 ரன்கள் வரை எடுக்க வாய்ப்புள்ளதாக வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago