வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த சூழலில் நேற்று ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதியது.
இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 224 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி கடைசி வரை போராடியும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. வெற்றியை நூல் இலையில் குஜராத் அணி தவறவிட்டது.
அதன்படி குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பிறகு குஜராத் கேப்டன் சுப்மன் கில் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். நல்ல கிரிக்கெட்டை விளையாடிய பிறகும் இறுதியில் தோல்வி அடைவது ஏமாற்றம் தருகிறது. இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் இறுதி வரை போராடியது பெருமை அளிக்கிறது.
இந்த போட்டியில் எந்த நேரத்திலும் வெற்றியை இலக்கை விட்டு வெளியேறியதாக நாங்கள் நினைக்கவில்லை. 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடும்போது திட்டங்களை பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. களத்தில் இறங்கினால் அடித்துதான் விளையாட வேண்டும். இதுபோன்ற இலக்கை நோக்கி விளையாடும்போது இம்பாக்ட் பிளேயருக்கு கொஞ்சம் பங்கு இருக்கும்.
அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தாலும், பேட்டர்கள் தொடர்ந்து அடித்து ஆட வேண்டிய சூழல் இருக்கும். ஒரு கட்டத்தில், டெல்லி அணியை 200-210 ரன்களில் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தோம், ஆனால் கடைசி 2-3 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். அதுமட்டுமில்லாமல், இது ஒரு சிறிய மைதானம்.
அதிக ஸ்கோர் வரும் என்றும் நாங்கள் யோசித்தோம். இதனால் நல்ல ஓப்பனிங் அல்லது செட்டில் பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர் இருந்தால் நல்ல முடிவாக இருக்கும். எனவே இதுபோன்ற மைதானத்தில் உங்கள் எல்லா திட்டங்களை சரியாக செய்வது முக்கியமான ஒன்றாகும் என தெரிவித்தார்.