காயம் காரணமாக சுப்மன் கில் களமிறங்கவில்லை – பிசிசிஐ அறிவிப்பு..!
2-வது இன்னிங்ஸில் சுப்மன் கில் காயம் காரணமாக தொடக்க வீரராக களமிறங்கவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – நியூஸிலாந்து இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸில் தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 4, சிராஜ் 3, அக்சர் படேல் 2, ஜெயண்ட் யாதவ் 1 விக்கெட்டை பறித்தனர்.
இதனால், 263 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் 332 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. களத்தில் மயங்க் அகர்வால் 38*, புஜாரா 29* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்கவில்லை.
இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்ப பிசிசிஐ தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யும் போது சுப்மன் கில் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையவில்லை. எனவே சுப்மன் கில் களம் இறங்கவில்லை என தெரிவித்துள்ளது.
???? Update ????: Shubman Gill suffered a blow to his right elbow while fielding in the first innings. He has not recovered completely and hence not taken the field as a precautionary measure.#TeamIndia #INDvNZ @Paytm pic.twitter.com/UqSzXYTce2
— BCCI (@BCCI) December 4, 2021