#IPL2022: அடேங்கப்பா.. சூப்பர்மேன் போல பறந்து கேட்ச் பிடித்த சுப்மன் கில்!

15-வது ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில், டைவ் அடித்து கேட்ச் பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – டி காக் களமிறங்கினார்கள். முதல் ஓவரை முகமது ஷமி வீசிய நிலையில், கே.எல்.ராகுல் கோல்டன் டக் ஆனார்.
அதனைதொடர்ந்து தனது மற்றொரு ஓவரில் டி காக்-ன் விக்கெட்டை வீழ்த்தினார். இந்நிலையில், 3-ம் ஓவரை வருண் ஆரன் வீசினார். 3-ம் பந்தில் அவர் எவன் லீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். வரும் வீசிய பந்தை எவன் மிட்-ஆப் திசையில் வேகமாக அடித்தார். அந்த பந்து பவுண்டரி செல்லும் என எதிர்பார்த்த நிலையில், பந்தை நோக்கி ஓடி, டைவ் அடித்து பந்தை பிடித்து எவன் விக்கெட்டை வீழ்த்தினார், சுப்மன் கில். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியம் அடைந்து, அதுதொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Is it a ????? Is it a ✈️? No! It’s Shubman Gill!#TitansFAM, ???????????????? ???????????????? ?????????#SeasonOfFirsts #AavaDe #GTvLSG #TATAIPL pic.twitter.com/BoAePJxqJL
— Gujarat Titans (@gujarat_titans) March 28, 2022
மேலும், 1983-ம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கபில் தேவ் பந்தை பின்னோக்கி ஓடி பிடித்தார். தற்பொழுது இந்த கேட்ச், அதேபோல இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Catch of the season- shubman gill ???? pic.twitter.com/3igSWYpRse
— depressed gill fan (@ceoofgilledits) March 28, 2022