“என்னுடைய சதத்தை பற்றி யோசிக்காத” ஷ்ரேயாஸ் சொன்ன விஷயம்…ஷஷாங்க் சிங் எமோஷனல்!
ஷ்ரேயாஸ் சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு மன அழுத்தத்தைக் குறைத்து, சுதந்திரமாக விளையாட உதவியது என ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தான் வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வெற்றிபெற்றதற்கு ஷ்ரேயாஸ் ஐயர், ஷாஷாங்க் சிங் இருவருடைய அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணங்கங்களில் ஒன்று என்று சொல்லலாம்.
அதிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய அதிரடி ஆட்டம் தான் பலரையும் கவர்ந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த போதிலும், கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை தனது அணியின் அதிரடி வீரர் ஷாஷாங்க் சிங்கிடம் விட்டுக்கொடுத்தார். ஒரு பந்தில் சிங்கிள் எடுத்து கொடுப்பதற்கு பதிலாக அதில் சிக்ஸர் அல்லது பவுண்டரி விளாசினால் அணிக்கு ரன்கள் சேரும் என்ற காரணத்தால் ஷ்ரேயாஸ் ஐயர் சதம் கூட வேண்டாம் என விட்டுக்கொடுத்தார்.
ஷாஷாங்க் சிங், அந்த ஓவரில் முகமது சிராஜை எதிர்கொண்டு அடுத்தடுத்து விளையாடி 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து, அணியின் மொத்த ஸ்கோரை 243ஆக உயர்த்தினார். இதன் மூலம் இதனை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி அந்த டார்கெட்டை எட்ட முடியாமல் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. சதத்தை தவறவிட்டு அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னிடம் சொன்ன விஷயம் என்னவென்பது குறித்து ஷஷாங்க் சிங் போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஷ்ரேயாஸ் ஐயர் என்னிடம் முதல் பந்திலிருந்தே ‘என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்படாதே, உன்னுடைய ஆட்டத்தை விளையாடு’ என்று கூறினார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஏனென்றால், என்னுடைய கவனத்தில் அவருடைய சதமும் இருந்தது. அந்த சூழலில் சதத்தை பற்றி கவலைப்படாதா என கூறிவிட்டு அதிரடியாக என்னை விளையாட அவர் கூறியது அது என்னுடைய மன அழுத்தத்தைக் குறைத்து, சுதந்திரமாக விளையாட உதவியது.
ஒரு அணி தலைவைராக இருந்து கொண்டு இப்படியான சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவர் சதம் வேண்டாம் அணிக்கு ரன்கள் தான் முக்கியம் என கூறியது எனக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது. அந்த விஷயம் அவரை எனக்கு பிடிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது” எனவும் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.