விளையாட்டு

மிகப்பெரிய சிக்ஸரை விளாசி ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை..!

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகப்பெரிய சிக்ஸரை விளாசிய சாதனை படைத்தத்துள்ளார்.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 33-வது போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், நீண்ட தூரம் சிக்ஸரை அடித்து நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஷுப்மான் கில் 30-வது ஓவரில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து கிரீஸுக்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

இருப்பினும், நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் அடித்த சிக்ஸரை விட கசுன் ராஜித் வீசிய 36-வது ஓவரின் நான்காவது பந்தில் மிக நீண்ட சிக்சரை ஷ்ரேயாஸ் ஐயர் அடித்தார். அவர் அடித்த சிக்ஸர் 106 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதற்கு முன் தரம்சாலாவில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் 104 மீட்டர் சிக்ஸர் அடித்து நடப்பு உலகக்கோப்பையில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த  பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லை தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் பின்தள்ளினார்.

 

 

Published by
murugan
Tags: #INDvsSL

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

3 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

3 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

4 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

5 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

5 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

7 hours ago