குஜராத்தை வெளுத்து விட்ட ஸ்ரேயாஸ் ஐயர்! ஹிட் மேன் கொடுத்த பேட்டுனா சும்மாவா?
ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வரும் CAET பேட் கேப்டன் ரோஹித் சர்மா கொடுத்த பேட் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.

அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் செய்திகளில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. 42 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவறவிட்டால் அவருடைய அதிரடி ஆட்டம் இன்னும் ரசிகர்கள் கண்ணைவிட்டு போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு எதிராணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பயத்தை காட்டினார்.
அது மட்டுமின்றி, குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் அதிகம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். அவருடைய அதிரடி ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்துகொண்டு இருக்கும் சூழலில், இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டு இருக்கும் கேள்வி என்னவென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடி வரும் CAET பேட் ரோஹித் சர்மா கொடுத்ததா? இல்லையா என்பது தான்.
ஏனென்றால், இந்த பேட்டை தான் ரோஹித் சர்மா பயன்படுத்தி வருகிறார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஏற்கனவே ஒரு தகவல் பரவி கொண்டு இருந்தது. அது என்னவென்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடியது ரோஹித் சர்மா கொடுத்த பேட் தான் என்று பரவியது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக அவர் பேட் கொடுத்தார் என்கிற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ரசிகர்கள் இந்த தகவலை பரப்ப தொடங்கினார்கள். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் ரோஹித் சர்மா கொடுத்த அந்த பேட்டை வைத்து தான் விளையாடி வருகிறார் என பேசி வருகிறார்கள். மேலும், சிலர் ஹிட் மேன் கொடுத்த பேட்டுனா சும்மாவா? எனவும் கூறி வருகிறார்கள்.
CAET பேட்டை பொறுத்தவரையில் பொதுவாகவே அதில் “HITMAN” என்று எழுதியிருக்கும். எனவே, ரோஹித் ஷர்மாவை ரசிகர்கள் அன்போடு HITMAN என அழைப்பதுண்டு. எனவே, CAET பேட்டில் “HITMAN” என்று எழுயிருப்பது தெரியாமல் சிலர் அந்த பேட்டை ரோஹித் சர்மா தான் அவருக்கு கொடுத்திருக்கலாம் என கூறி வருவதாகவும் கேள்விகள் எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மாவின் பேட்டா இல்லையா என்பது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் எதுவும் பேசவில்லை. தொடர்ச்சியாக இது போன்ற தகவல்கள் பரவி வருவதன் காரணமாக விரைவில் அவர் விளக்கம் கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.