அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசல்
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரராக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 13 ரன்கள் எடுத்து மயங்க் அகர்வால் விக்கட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா நிதானமாக விளையாட மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில் 52 ரன்கள் எடுத்திருந்தபோது 30-வது ஓவரில் ஜேமிசனிடம் போல்டானார்.
அடுத்த சில ஓவரில் புஜாரா 26, ரஹானே 35 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். தற்போது ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி 83 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 75* , ஜடேஜா 50* ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…