ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் வார்னர் உட்பட 3 வீரர்கள் விற்கப்படாததால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக ஏற்பட்டுள்ளது.
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல் ஹைதராபாத் வரை உள்ளிட்ட 10 அணிகளும் ஏலத்தில் அவர்களது பங்கை சிறப்பாகவே செய்தார்கள்.
ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு சென்றது முதல் சென்னை அணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வினை வாங்கியது வரை நேற்று நடைபெற்ற அனைத்துமே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும், ஏலத்தில் இந்த 3 முக்கிய வீரர்கள் எல்லாம் சிறப்பான விலைக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் விற்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த 3 முக்கிய வீரர்கள் யார் என்றால் தேவ்துத் படிக்கல், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ தான்.
தேவதுத் படிக்கல் :
படிக்கல் தனது ஐபிஎல் போட்டியை பெங்களூரு அணியிடமிருந்து தொடங்கினார். அவர் அறிமுகமான தொடரில் பெங்களூரு அணிக்காக ஒரு மிக முக்கிய வீரராக பார்க்கபட்டார். தொடக்கத்தில் களமிறங்கும் இவர் மற்ற அணிகளின் வேக பந்து பவுளர்களை துவம்சம் செய்வார். பல போட்டிகளில் பெங்களூரு அணியின் அடிக்கல்லாக அமைந்தவர் தான் படிக்கல்.
அதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அணிக்காகவும் இவர் சிறப்பாகவே விளையாடினார். இந்த முறை ராஜஸ்தான் அணியால் விடுவிக்கப்பட்ட இவர் எந்த ஒரு அணியாலும் எடுக்கப்படாதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
டேவிட் வார்னர் :
ஐபிஎல் தொடரை பற்றி கூற வேண்டும் என்றால் டேவிட் வார் நடை பற்றி கூறாமல் இருக்க முடியாது. அதற்குக் காரணம் அவர் ஐபிஎலில் செய்த சம்பவம் அப்படி தான் இடம் பெற்றிருக்கும் அணியில் தொடக்க வீரராக கலந்து இறங்கினார் என்றால் எதிரணியினரை கலங்க வைக்காமல் இருந்ததில்லை.
அவரது ஆட்டம் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் மறக்காத வண்ணம் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கும். கடந்த 2016 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகமான போது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட இவர் அந்த வருடம் சேம்பியன் கோப்பையும் தட்டி தூக்கினார். அதன் பிறகு ஃபார்ம் அவுட், சர்ச்சை என பல இன்னல்களை சந்தித்த இவர் தொடர்ந்து நடந்த ஐபிஎல் தொடரில் பெரிதளவு பேசப்படாமலே போனார்.
கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரராக செயல்பட்ட இவர், 2023-ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டனகவும் செயல்பட்டார். மேலும், இந்த முறை டெல்லி அணி அவரை விடுவித்த நிலையில் நடைபெற்ற ஏலத்தில் எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது ஆச்சர்யமாகவே பார்க்கப்படுகிறது.
ஜானி பேர்ஸ்டோ :
ஜானி பேர்ஸ்டோ ஒரு அற்புதமான தொடக்க வீரரும், விக்கெட் கீப்பரும் ஆவார். விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தாலும் இவர் அணியில் இருக்கிறார் என்றால் அந்த அணிக்கு தூணாகவே நின்று விளையாடுவார். இவரது நிதான ஆட்டத்தால் எதிரணியை சோர்வடைய செய்வார்.
எந்த அளவிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ அதே அளவிற்கு ஆக்ரோஷமான விளையாட்டையும் இவர் வெளிப்படுத்துவார். அதற்கு உதாரணம் தான் கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் 240 ரன்கள் சேஸ் செய்யும் போது, அவரது ஆக்ரோஷ விளையாட்டால் அந்த அணியை வெற்றி பெறச் செய்து ஐபிஎல் தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்திருப்பார்.
ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர்களும் ஒருவராக பார்க்கப்பட்ட இவர் இந்த ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை ஏலத்தில் விற்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.