கிரிக்கெட்

அதிர்ச்சி தோல்வி! செருப்பை கழட்டி அடித்துக்கொண்ட வங்கதேசம் ரசிகர்…வைரலாகும் வீடியோ!

Published by
பால முருகன்

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ( அக்டோபர் 28) ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நெதர்லாந் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டனின் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நெதர்லாந்திடம் வங்கதேசம் 87 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது.

வங்கதேசம் அணி தோல்வியை சந்தித்ததால் மிகவும் ஆத்திரம் அடைந்த ரசிகர் ஒருவர் தன்னுடைய செருப்பை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் ” வங்கதேசம் அணி தோல்வி அடைந்தவுடன் மிகவும் கோபத்திலும் வேதனையிலும் ஒரு நபர் கேமராவுக்கு முன்பு நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்.

அப்போது பெரிய அணிகளிடம் தோல்வி அடைந்தால் கூட கவலை இல்லை. அதைப்பற்றி நாங்கள் பெரிதாக வருத்தப்படமாட்டோம் ஆனால், நெதர்லாந்திடம் எப்படி தோற்றது? என்னால் இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை அந்த அளவிற்கு கோபமாக வருகிறது என கூறிவிட்டு தான் கால்களில் அனிருந்திருந்த செருப்பை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். கோபத்துடன் பேசிக்கொண்டிருந்த அந்த நபர் திடீரென  செருப்பை கலட்டிக்கொண்டு தன்னை தானே அடித்த காரணத்தால் இதனை பார்த்த அவருடன் வந்தவர்கள் சிரிக்கவும் செய்தார்கள்.

மேலும், நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந் அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தனர். அடுத்ததாக 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 42 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந் அணி வெற்றிபெற்றது.  இந்த தோல்வியின் மூலம் பங்களாதேஷ் அணியும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் இந்த மோசமான ஆட்டத்தால், ரசிகர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இதன் காரணமாக தான் விரக்தியில் அந்த ரசிகர் தன்னை தானே ஆதங்கத்தில் செருப்பை கழட்டி அடித்துக்கொண்டார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

27 seconds ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

8 minutes ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

31 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

1 hour ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

2 hours ago