அதிர்ச்சி…ஆஸ்தி.முன்னாள் விக்கெட் கீப்பர் ரியான் ஐசியூவில் அனுமதி!
நெதர்லாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பருமான ரியான் காம்ப்பெல்லுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து லண்டனில் உள்ள ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
50 வயதான ரியான் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாகவும்,இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Netherlands men’s cricket coach Ryan Campbell in ICU after heart attack
Read @ANI Story | https://t.co/GEAQD5HB13#RyanCampbell pic.twitter.com/aXBfX5Ttod
— ANI Digital (@ani_digital) April 19, 2022
ரியான்,1995-96 சீசனில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். மேலும் ஆரம்பத்தில் ஆடம் கில்கிறிஸ்டுடன் இணைந்து ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக விளையாடினார்.அதன்படி,காம்ப்பெல் மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக 36.31 சராசரியுடன் 6009 ரன்களை எடுத்தார்.
பின்னர்,2016 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை பிரச்சாரத்தில் ஹாங்காங் அணிக்காக அவர் பங்கேற்றார். இதனையடுத்து,ஜனவரி 2017 இல்,ரியான் டச்சு தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.