அதிர்ச்சி :ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்..!

Default Image

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இவருக்கு வயது 52. இவர் தாய்லாந்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

சிட்னியில் இந்திய அணிக்கு எதிராக  1992-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, இதுவரை 708 விக்கெட்டுகளை  வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக இவர் விளையாடி உள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குரியவர். தனது மாயாஜால பந்துவீச்சால்  உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த இவரது இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்