இதுக்கு தான் உங்க பெயர் ஆறுச்சாமி! மும்பை அணிக்காக சம்பவம் செய்த சிவம் துபே!

சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினார்கள்.

shivamdube

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை  சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார்.

டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த சூழலில் அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு துபே மற்றும் சூர்யகுமார் இணைந்து 66 பந்துகளில் 130 ரன்கள் சேர்த்தனர்.

இருவரும் இணைந்து 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை என எதிரணி வீரர்களின் பந்துகளை நாளா பக்கமும் தெறிக்கவிட்டார்கள். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் துபே 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் 70 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினாலும் கூட பலருடைய கண்கள் சிவம் துபே  பேட்டிங்கில் தான் இருந்தது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே, சிவம் துபே மொத்தமாக அந்த போட்டியில் 7 சிக்ஸர்கள் விளாசினார். அது மட்டுமின்றி 2 பவுண்டரிகளும்  விளாசினார். இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக தான் மும்பை அணி 192 ரன்கள் குவிக்க முடிந்தது.

அது மட்டுமின்றி இந்த போட்டியில் மும்பை 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், சையத் முஷ்டாக் அலி டிராபி 2024ல் மும்பை அணி குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்த அணி இதுவரை ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்