Shivam Dube [file image]
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார்.
நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே முதலில் ஐபிஎல் தொடரில் முதலில் 2019 ஆண்டு ஆர்சிபி அணிக்காக களமிறங்கினார். ஆனால், தொடர்ந்து 3 வருடம் அந்த அணியில் இருந்து விளையாடாத அவர் 2022 ம் ஆண்டு சென்னை அணிக்காக இடம் பெற்ற போது அந்த ஆண்டில் அவரது ஆக்ரோஷமான அதிரடியை ஐபிஎல்லில் அறிமுகபடுத்தினார்.
இதனால் சென்னை அணிக்கு உரித்தான ஒரு அதிரடி வீரராகவே மாறி விட்டார் என கூறலாம். தற்போது, நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிவம் துபே மிக சிறப்பாக அதிரடி காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இவரை வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்களும், சில கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேனும், MR.360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் தற்போது துபேவை டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் பரிந்துரை செய்து பேசி இருக்கிறார். மேலும், இவர் அணியில் இடம் பெறுவதற்கு தடையாக இருக்கும் சில விஷயங்களையும் அவரது யூடுப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பெங்களூரு அணியிலிருந்து வெளியே வந்தவுடன் சிவம் துபே ஒரு மிகப்பெரிய தூரத்தை அடைந்துள்ளார். தற்போது அவர் சி.எஸ்.கே. அணியில் சுதந்திரமாக விளையாடுகிற உணர்வு அவருக்கு கிடைத்துள்ளது. அதனால், அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கிறார்.மேலும், பேட்டிங் செய்ய களமிறங்கும் போது அவர் எதை பற்றியும் சிந்திக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்தை அடிக்கிறார்.
சில போட்டிகளில் அவர் அடித்த 50+ பட்ட ரங்கள் சிஎஸ்கே அணியின் வெற்றியை தீர்மானித்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை அணியில் அவரை எடுக்கலாம் ஆனால் ரிங்கு சிங், ரியான் பராக், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுடன் கடுமையான போட்டிகள் நிலவுவதால் அவர் அணியின் இடம் பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கலாம்”, என்று அவரது யூடுப் சேனலில் கூறி இருந்தார்.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…