கண்டிப்பா ஷிவம் துபே உலகக்கோப்பையில் விளையாடனும்! புகழ்ந்த டிவில்லியர்ஸ் !

Shivam Dube

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார்.

நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே முதலில் ஐபிஎல் தொடரில் முதலில் 2019 ஆண்டு ஆர்சிபி அணிக்காக களமிறங்கினார். ஆனால், தொடர்ந்து 3 வருடம் அந்த அணியில் இருந்து விளையாடாத அவர் 2022 ம் ஆண்டு சென்னை அணிக்காக இடம் பெற்ற போது அந்த ஆண்டில் அவரது ஆக்ரோஷமான அதிரடியை ஐபிஎல்லில் அறிமுகபடுத்தினார்.

இதனால் சென்னை அணிக்கு உரித்தான ஒரு அதிரடி வீரராகவே மாறி விட்டார் என கூறலாம். தற்போது, நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிவம் துபே மிக சிறப்பாக அதிரடி காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இவரை வருகிற டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்களும், சில கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேனும், MR.360 என அழைக்கப்படும் டிவில்லியர்ஸ் தற்போது துபேவை  டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் பரிந்துரை செய்து பேசி இருக்கிறார். மேலும், இவர் அணியில் இடம் பெறுவதற்கு தடையாக இருக்கும் சில விஷயங்களையும் அவரது யூடுப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பெங்களூரு அணியிலிருந்து வெளியே வந்தவுடன் சிவம் துபே ஒரு மிகப்பெரிய தூரத்தை அடைந்துள்ளார். தற்போது அவர் சி.எஸ்.கே. அணியில் சுதந்திரமாக விளையாடுகிற உணர்வு அவருக்கு கிடைத்துள்ளது. அதனால், அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கிறார்.மேலும், பேட்டிங் செய்ய களமிறங்கும் போது அவர் எதை பற்றியும் சிந்திக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்தை அடிக்கிறார்.

சில போட்டிகளில் அவர் அடித்த 50+ பட்ட ரங்கள் சிஎஸ்கே அணியின் வெற்றியை தீர்மானித்துள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பை அணியில் அவரை எடுக்கலாம் ஆனால் ரிங்கு சிங், ரியான் பராக், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களுடன் கடுமையான போட்டிகள் நிலவுவதால் அவர் அணியின் இடம் பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கலாம்”, என்று அவரது யூடுப் சேனலில் கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI