அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Published by
பால முருகன்

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பாணியில் இருப்பதாக அவருடன் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ஒப்பபிட்டு பேசி வருகிறார்கள்.

இப்படி ஒப்பிட்டு பேசுவது ரொம்பவே முட்டாள் தனமான விஷயம் என சிவம் துபே சற்று கடுப்பாகி பேசியுள்ளார். பிசிசிஐக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய சிவம் துபே “யுவராஜ் சிங் உடன் என்னை ஒப்பிடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. எனக்கு என்று தனியாக ஒரு சொந்த பாணி இருக்கிறது. நான் அந்த பாணியில் தான் விளையாடி கொண்டு இருக்கிறேன்.

அவருக்கும் தனி பாணி இருக்கிறது. எனவே அவருடைய பாணியும் என்னுடைய பாணியும் சில இடங்களில் ஒற்றுமைகள் இருக்கலாம். நான் முழுக்க முழுக்க இப்போது என்னுடைய விளையாட்டில் மட்டும் தான் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறேன். நான் அதிரடியாக விளையாடுவதா இல்லையா என்பது பற்றி நான் யோசிக்கவில்லை. அணிக்கு எப்படி விளையாடினாள் பயனாக இருக்குமோ அந்த வகையில் நான் எவ்வாறு செயல்பட முடியும் என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன்.

அணியில் கேப்டன் நம்மளை நம்பினால் போதும் நாம் கண்டிப்பாக அருமையாக விளையாடுவோம். வாய்ப்புகள் கிடைத்தது என்றாலும் அந்த வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்” எனவும் சிவம் துபே தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிரடியான பார்மில் இருக்கும் சிவம் துபே டி20 உலகக்கோப்பையில் எப்படி விளையாடப்போகிறார் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

21 minutes ago
மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

15 hours ago
சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

16 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

16 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

17 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

18 hours ago