#IPL2021: முதலிடத்தில் பெங்களூர்.. ஆரஞ்சு கேப் வாங்கிய தவான், பர்பிள் கேப் ரேஸில் ஹர்ஷல் படேல் முன்னிலை!

Default Image

14-ம் சீசனுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம்.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதனைதொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் படிக்கல் – கோலி அதிரடியாக ஆடி, அணியை வெற்றிபெற செய்தனர்.

புள்ளிப்பட்டியல்:

படிக்கல் – கோலியின் அதிரடி ஆட்டத்தால் 8 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் பெங்களூர் அணி முதலிடம் பிடித்தது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் உள்ளது. அதனைதொடர்ந்து 4-ம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இன்றைய போட்டியில் அதிகப்படியாக ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மும்பை அணி இரண்டாம் இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 5,6,7 மற்றும் 8-ம் இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் அணிகள் உள்ளது.

ஆரஞ்சு கேப்:

ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகள் ஆடிய ஷிகர் தவான், 57.75 சராசரியாக 231 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக ஆடிவந்த இவர், ஆரஞ்சு கேப்பை வைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆல்-ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், 176 ரன்களுடனும், 173 ரன்களுடன் ஜானி பேர்ஸ்டோவ் மூன்றாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டு பிளெசிஸ், 164 ரன்கள் எடுத்து நான்காம் இடத்திலும், கொல்கத்தா அணியின் நிதீஷ் ராணா 164 ரன்கள் எடுத்து ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.

பர்பிள் கேப்:

பெங்களூர் அணியின் டெத் ஓவர் எஸ்பர்ட் ஹர்ஷல் படேல் நான்கு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்பிள் கேப்பை வைத்துள்ளார். அதனைதொடர்ந்து தீபக் சஹர், 8 விக்கெட்டுகளுடன் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆவேச வீரர் அவேஷ் கான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் யின் ராகுல் சாஹர், தலா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால் குறைந்த எகனாமி காரணமாக அவர்கள் பின்னால் உள்ளனர். ஐந்தாம் இடத்தில் கொல்கத்தா அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்