விராட் கோலியின் சாதனையை கெத்தாக முறியடித்த ஷிகர் தவான்…!இனி தவான் தான் டாப் …!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்தார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.இதில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. 16.1 ஓவரின் போது போட்டி மழையால் நிறுத்தப்பட்டது.மழையால் 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வேல் 46,லின் 37 , ஸ்டோய்னிஸ் 31 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 2, கலீல் அகமது,பூம்ரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனால் இந்திய அணி 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் மட்டுமே அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் மட்டும் 77 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது .
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தவான் 77 ரன்கள் எடுத்ததால் சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் இந்த ஆண்டில் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்தார். அவர் இந்த ஆண்டில் இதுவரை 16 போட்டிகளில் 648 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 641 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024