ஐபிஎல் வரலாற்றில் 50 ரன் பார்ட்னர்ஷிப்களை அடித்து விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷிகர் தவான்.
இந்த ஆண்டிற்க்கான ஐபிஎல் தொடர் நேற்று குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி தற்பொழுது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இன்று தொடரின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே உடனான பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 94 முறை 50 ரன் பார்ட்னர்ஷிப்களை அடித்து பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் சாதனையை பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் சமன் செய்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா 83 முறையும், டேவிட் வார்னர் 82 முறையும், ரோஹித் சர்மா 76 முறையும் 50 ரன் பார்ட்னர்ஷிப்களை அடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…