இருவரும் ஒன்றாக சாப்பிடவில்லை என்பதால் அவர்களுக்குள் பிரச்சனை என கூற முடியாது! ஷேவாக் அதிரடி கருத்து!

அண்மை காலமாக இந்திய கிரிக்கெட்டில் அணியில் தொடக்க வீரரான ரோகித் சர்மாவிற்கும், கேப்டன் விராட் கோலிக்கும் மோதல் இருப்பதாகவும், அவர்கள் முன்பு போல ஒன்றாக கலந்தாலோசிப்பது இல்லை எனவும் குற்றச்சாட்டுகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.
இந்த குற்றச்சாட்டு உலக கோப்பை தொடரில் இருந்து பேசப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது கேப்டன் கோலி எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் ரோகித்இல்லை. அது போல, ரோகித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் விராட் இல்லாததும் இவர்களுக்குள் மோதல் இருப்பது உறுதி என ரசிகர்களை அதிகமாக பேச வைத்தது.
இது குறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சேவாக், ‘ ஒரு வீட்டில் பல சகோதரர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட வேண்டுமென கட்டாயமில்லை. ஒரு விழா என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இருப்பது போல, கேப்டன் விராட்டும், ரோஹித்தும் ஒன்றாக சாப்பிடவில்லை என்பதால் இருவருக்கும் முட்டல் மோதல் என குறிப்பிடுவதில் உண்மை இல்லை. அவர்களாக வந்து இதற்க்கு பதிலை உறுதியாக கூறும் வரை, எந்த ஒரு விஷயத்தையும் நம்பக் கூடாது. எனவும் தெரிவித்தார்.
இதே போலத்தான், எனக்கும் மஹிந்திரா சிங் தொனிக்கும் பிரச்சனை என சிலர் வதந்திகளைப் பரப்பி விட்டனர். ஆனால், எனக்கும் தொனிக்கும் இடையில் எந்தவித பிரச்சனையும் இல்லை. இது போன்ற வதந்திகளை யார் பரப்புகிறார்கள். என தெரியவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025