பேசி சிட்டர் விவகாரம்..! அடித்து நொறுக்கிய அதிரடி மன்னன்..! எச்சரிக்கும் ஆஸ்திரேலியா ..!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷ்ப் பந்த்ஐ பார்த்து என் குழந்தைகளுக்கு பேபிசிட்டர் ஆக இருக்கிறாயா? என கேட்டார். இந்நிலையில் ரிஷப் பந்தும் ஆஸ்திரேலியா பிரதமர் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டபோது தன்னை கலாய்த்த டிம் பெய்னின் குழந்தையை எடுத்து கொஞ்சினார். டிம் பெய்ன் மனைவி ரிஷப் பந்த்தை ஒரு சிறந்த ‘பேபி சிட்டர்’ என்று டுவீட் செய்து இருந்தார்.இந்த சம்பவம் ஆனது அந்தத் தொடர் முழுவதுமே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்குகொண்டு விளையாட இந்தியா வருகின்றது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ‘பேபிசிட்டிங்’ என்ற விளம்பர படத்தில் நடித்தார். அதில் நடித்த அதிரடி மன்னன் சேவாக் ‘‘நாங்க ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவர்கள் எங்களிடம் பேபிசிட்டராக இருக்க முடியுமா?’’ என கேட்டார்கள்.அதற்கு நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாங்க..நீங்க சொல்ற செய்கிறோம்’’ என்று உறுதி அளிப்பது போல கூறுகிறார்.
இந்த விளம்பரத்தை பார்த்து கடுப்பான மேத்யூ ஹெய்டன் இதை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள டுவிட்டரில் சேவாக் எச்சரிக்கிறேன் ஆஸ்திரேலியா அணியை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா. மேலும் உலகக்கோப்பை போட்டி போது யார் பேபி சிட்டர் ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினச்சு பாருங்கள் என்று பதில் கொடுத்துள்ளார்.
#BeWarned Never take Aussie’s for a joke Viru Boy @virendersehwag @StarSportsIndia Just remember who’s baby sitting the #WorldCup trophy https://t.co/yRUtJVu3XJ
— Matthew Hayden AM (@HaydosTweets) February 11, 2019