தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் 12 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. கடைசி நேரத்தில் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியதால் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து விக்கெட் இழந்தது. இதனால், 49 ரன்னிற்கு இந்திய அணி 3 விக்கெட்டை இழந்தது.
பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல் மட்டும் 50 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு அஸ்வின்அஸ்வின் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணிதனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் மேர்கோ ஜேன்சண் 4, ரபாடா டுவானே தலா 3 விக்கெட்டு பறித்தனர். நேற்றைய மீதம் இருந்த நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
முதல் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய 2-நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்து தென் ஆப்பிரிக்க நிதானமாக விலையாடி வந்தது. கீகன் பீட்டர்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி 62 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் அடுத்ததுடுத்து விக்கெட்டை பறித்து தென் ஆப்பிரிக்க அணியை திணற செய்தார். ஷர்துல் தாகூர் அடுத்ததுடுத்து தொடர்ந்து 5 விக்கெட்டை பறித்தார்.
இதனால், தென்னாபிரிக்கா அணி 70 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 5, முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். பவுமாவின் விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தியதன் மூலன் டெஸ்ட் போட்டியில் முதல் 5-விக்கெட் ஹவுலை எடுத்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…