டி-20 தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்த வாட்சன்.. ரசிகர்கள் வருத்தம்!

Default Image

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் லெஜெண்டாக இருந்தவர், ஷேன் வாட்சன். இவர் இதுவரை 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 டி-20 போட்டிகளில் விளையாடினார். அதனைதொடர்ந்து 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், 2008 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக கோப்பையை கைப்பற்ற பெரும் பலமாக இருந்தார்.

அதன்பின் வாட்சன், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.அவரின் சிறப்பான ஆட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம்படைத்தார். அதிலும் குறிப்பாக, 2019-ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஷேன் வாட்சனின் காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்தது. இதனை பார்த்த ரசிகர்கள், அவர் போட்டியில் இருந்து விலகப்போவதாக எதிர்பார்த்த நிலையில், காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக ஆடிவந்தார்.

அப்படிப்பட்ட சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய ஷேன் வாட்சன், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடவில்லை. மேலும், அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வர தொடங்கிய நிலையில், தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வாட்சன் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். காயத்துடன் ஆடிய சிங்கத்திற்கு பலரும் கண்ணீருடன் #WatsonRetires என்ற ஹாஸ்டாகில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்