ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு – அவரது நண்பர் பகிர்ந்த உருக்கமான தகவல்!

Default Image

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு,இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தனர்.

அதே சமயம்,கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.

இந்நிலையில்,ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது பழைய கிரிக்கெட் ஜெர்சியை பரிசாக அளித்து,ஆஸ்திரேலிய பாரம்பரிய சிற்றுண்டி உணவான வெஜ்மைட்டை சாப்பிட்டு, இறப்பதற்கு முன் ராவல்பிண்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியை கடைசி மணி நேரத்தில் பார்த்ததாக தி ஸ்போர்ட்டிங் நியூஸ் இணையதளத்தின் தலைமை நிர்வாகியும், வார்னேவின் நீண்டகால நண்பருமான டாம் ஹால் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:”வார்னேவும் கிரிக்கெட்டும் தொலைவில் இருந்ததில்லை.அந்த வகையில்,தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் நகரில், 52 வயதான வார்னே  ‘தாய்லாந்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நாம் எப்படிப் பார்க்கலாம்;ஆட்டம் தொடங்கப் போகிறது? என்று கூறினார்.இதனையடுத்து,திடீரென்று அவர் மாரடைப்பால் காலமானார்.எனவே,வார்னேவின் மரணத்தில் அசாதாரணமான சூழலும் இல்லை.

இதற்கிடையில்,ஷேன் கடந்த ஒரு வருடமாக தி ஸ்போர்ட்டிங் நியூஸில் என்னுடன் பணிபுரிந்தார், 2005 ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்டின்போது அணிந்திருந்த பழைய கிரிக்கெட் ஜெர்சியை பரிசாக அளித்தார். மேலும்,அவரது 2008 ஐபிஎல் ஜெர்சி மற்றும் ஒரு நாள் சர்வதேச ஜெர்சி மற்றும் தொப்பி ஆகியவை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள TSN அலுவலகங்களில் வைக்கப்படும்.”என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்