இந்திய அணியில் கிரிக்கெட் வீரரான முஹமது ஷமி, ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனால் 2020-ல் இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து முஹமது ஷமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்த்துக்கள், அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். குறிப்பாக, ரஹானே, பும்ரா, அஸ்வின், உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோரின் விளையாட்டை நான் ரசித்து பார்த்தேன். அடுத்த போட்டிக்காக காத்திருக்கின்றேன்.” என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். இதனை ரி-ட்வீட் செய்த அஸ்வின், “தேங்க்ஸ் டா தம்பி.. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.
அஸ்வின் ஷமியை நக்கலாக கலாய்த்த இந்த பதிவு, நெட்டிசன்கள் பார்வையில் பட, அவர்கள் இதனை ட்ரெண்ட் செய்ய தொடங்கினார்கள். குறிப்பாக, “அவர் ஹிந்தியில் கூறியதால் நாங்கள் தமிழில் பதிலளித்துள்ளோம்.. கணக்கு சரியா போச்சி” என்ற கமண்டும் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…