ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி தேவையில்லை என்றும், அர்ஷ்தீப்பை விளையாட வைக்கலாம் என்று இந்திய அணி திட்மிட்டுள்ளனர்.

shami - arshdeep singh -rohit sharma

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது சந்தேகம் எனப்படுகிறது.

ரோஹித் இல்லை என்றால், யாரு டீம் கேப்டன் என்று கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக உண்மை என்னெவென்று போட்டி நாளன்று தெரிந்து விடும். இதனிடையே, முழு வீச்சில் பந்து வீசுவதை உறுதிசெய்ய முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி தேவையில்லை என்றும், அர்ஷ்தீப்பை விளையாட வைக்கலாம் என்று திட்மிட்டுள்ளனர்.

இந்தியா இதுவரை விளையாடிய இரண்டு குரூப் போட்டிகளிலும் ஷமி விளையாடியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிராக, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதை நிரூபித்தார் முகமது ஷமி. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால், அந்த போட்டி முக்கியமற்றதாக இருப்பதால், ஷமிக்கு ஓய்வு அளித்து, நாக் அவுட்களுக்கு அவரைப் பாதுகாப்பது இந்தியாவு முடிவு செய்துள்ளதாம்.

அணியில் அர்ஷ்தீப்பைத் தவிர, ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்கி கூடுதல் சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் வாய்ப்பும் இந்தியாவுக்கு உள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் ஹர்திக் பாண்ட்யா முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளதால், வருண் சக்ரவர்த்திக்கு ஒரு ஆட்டத்தை கொடுக்க இந்திய அணிமுன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்