ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா பயிற்சி 2 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று விளையாடியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் தேர்வு செய்தது. இதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 57 ரன்களும் சூரியகுமார் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 35 ரன்களுடன் மிட்சேல் மார்ஷ் அவுட் ஆனார். அதன்பிறகு கேப்டன் ஆரோன் பின்ச் பொறுப்புடன் விளையாடி 76 ரன்கள் குவித்தார். ஆனால் பின் வரிசையில் வந்த வீரர்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
குறிப்பாக ஷமி வீசிய 20 ஆவது ஓவரில் அவரின் 3 விக்கெட்களுடன் மொத்தம் 4 விக்கெட்களை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதனால் இந்திய அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஷமி 3 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…