காவல் நிலையத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் புகார் அளித்துள்ளார். மேலும் ஷமி மீது மேட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டையும் அவர் கூறினார். இதனால் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தன் மீதான புகார்களைத் தீர விசாரிக்க வேண்டும் என்று முகமது ஷமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
மேட்ச்ஃபிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டை பிசிசிஐ உள்ளிட்ட அமைப்புகள் தீர விசாரிக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதில் பலருடைய வாழ்க்கை அடங்கியுள்ளது.
என் வாழ்க்கையைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். காப்பாற்ற ஒரு சதவிகித வாய்ப்பிருந்தாலும் அதற்காகப் போராடினேன். ஆனால் என்னை நீதிமன்றத்தில் சந்திப்பதாக ஹாசின் சொல்லிவிட்டார். இதற்குப் பிறகு எங்கள் வாழ்க்கை தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. என் மனைவியிடம் பேச என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பினேன். ஆனால் நாங்கள் இணைந்து வாழவேண்டும் என்று அவர் ஒரு சதவிகிதம் கூட நினைக்கவில்லை. கடும் முயற்சிகள் எடுத்தபிறகுதான் இதைச் சொல்கிறேன். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வோம் என்கிற நம்பிக்கையில்லை.
என் சகோதரர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறுகிறார். அன்றைய தினம் என் சகோதரர் என் வீட்டிலேயே இருக்கவில்லை. இது தவறான குற்றச்சாட்டு.
நாங்கள் திருமணம் செய்தபோது ஹாசினுக்கு முதல் திருமணம் நடந்தது குறித்து எனக்குத் தெரியாது. மெல்ல மெல்ல தான் அதுபற்றி என்னிடம் கூறினார். அவருடைய இரு பெண் குழந்தைகளையும் அவருடைய சகோதரியின் குழந்தைகள் என்று கூறியிருந்தார். எங்கள் குடும்பமும் அதை நம்பியது என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…