இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா?தொடரும் மர்மமான விசாரணை ….

Default Image

இந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமி மீது அவரது மனைவி வைத்த புகார் காரணமாக அவர்  சேர்க்கப்படவில்லை. அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் கேள்விகுறியாக உள்ளது. ஷமியின் மனைவி புகார் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

ஷமியின் மனைவி, தென் ஆப்ரிக்கா போட்டிக்கு பிறகு ஷமி துபாய்க்கு பாகிஸ்தான் பெண் இருவரை சந்திக்க சென்றதாகவும், அதன் பின்னணியில் சூதாட்டம் இருக்க கூடும் என புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கொல்கத்தா போலீஸார் பிசிசிஐயிடம் ஷமியின் பயண விவரங்களை கேட்டுள்ளது. தற்போது இதில் புது சிக்கல் என்னவெனில் பிசிசிஐ சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி தெரிவித்துள்ளார். எனவே, முகமது ஷமியிடம் சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு குழு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணை முடிவில் என்ன தகவல்கள் வெளியாகும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer