ஷாய் ஹோப் ,கீசி கார்டி அதிரடி ஆட்டம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

ind vs wi

மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி கென்சிங்டன் ஓவல், மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணி:

இப்போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர்  விளையாடவில்லை இதனால் ஹர்திக் பாண்டியாவை  கேப்டனாக தலைமை ஏற்று  இந்திய அணி களமிறங்கியது.இதனைத்தொடர்ந்து  தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷான் 55 ரன்கள், சுபம் கில் 34 ரன்கள் என நல்ல ஆரம்பத்தை கொடுத்தாலும்.

அதன் பின்னர் வந்தவர்கள் சிறப்பாக யாரும் விளையாடவில்லை சூர்யகுமார் யாதவ்(24),ரவீந்திர ஜடேஜா(10),ஷர்துல் தாக்கூர்(16) எடுத்து ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா,முகேஷ் குமார் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில்  ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும்  இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.மேற்கிந்திய தீவில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் குடாகேஷ் மோட்டி தலா 3 விக்கெட்களையும் அல்சாரி ஜோசப் 2 மற்றும் ஜெய்டன் சீல்ஸ்,யான்னிக் காரியம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மேற்கிந்திய தீவுகள் அணி:

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணியின் பந்துவீச்சை  முதல் போட்டியை விட இதில் சிறப்பாக எதிர்கொண்டு களம் கண்டனர்.

மேற்கிந்திய தீவில்  கைல் மேயர்ஸ்(36) ,ஷாய் ஹோப்(66),கீசி கார்டி(48) என முத்தான ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர்.இறுதியில் மேற்கிந்திய தீவு அணி 36.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில்  வெற்றி பெற்று சமனில் உள்ளது.மூன்றாவது போட்டியானது வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர் .

மேற்கிந்திய தீவின் ஷாய் ஹோப் 80 பந்துகளில் 63 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.இதனால் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்