பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை தேர்வாளராக ஷாகித் அப்ரிடி நியமனம்!
பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை தேர்வாளராக ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆடவர் தேசிய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் இடைக்கால தலைமை தலைவராக முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட இடைக்கால தேர்வுக் குழுவில் அப்ரிடியின் முன்னாள் அணி வீரர்களான அப்துல் ரசாக் மற்றும் ராவ் இப்திகார் அஞ்சும் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தொடருக்கு மட்டுமே இந்த நியமனம். முன்னதாக, தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து முகமது வாசிம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.