19 வயதில் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்து ஷாஹீன் இரண்டாமிடம்!
நடப்பு உலகக்கோப்பையில் நடைபெற்று வரும் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. நேற்று பாகிஸ்தான் அணியும் , பங்களாதேஷ் அணியும் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மோதினர்.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி 9.1 ஓவர் வீசி 35 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை பறித்தார்.இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி 12 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
உலகக்கோப்பையில் இளம் வயதில் அதிக விக்கெட்டை பறித்த வீரர்களின் பட்டியலில் ஷாஹீன் இரண்டாமிடத்தை பிடித்து உள்ளார்.இதற்கு முன் 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் இளம் வயதில்13 விக்கெட்டை பறித்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தான் அணியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 – அப்துல் ரசாக் (பாகிஸ்தான்), 1999
12 – ஷாஹீன் அஃப்ரிடி (பாகிஸ்தான் ), 2019
11 – ஆகிப் ஜாவேத் (பாகிஸ்தான்), 1992