தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

180 ரன்கள் சேஸிங் செய்து அடித்து விடலாம் என நினைத்தோம் ஆனால் முடியவில்லை என போட்டி முடிந்த பிறகு சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார்.

Ruturaj Gaikwad

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். 183 ரன்கள் இலக்குடன் சென்னை அணி களமிறங்கிய நிலையில் வெற்றிபெறும் வகையில் போட்டியை கொண்டு சென்று தோல்வி அடைந்தது என்று தான் சொல்லவேண்டும்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி  6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி பெற்றதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கேப்டன் ருதுராஜ்  வேதனையுடன் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெறவில்லை, ஆனால் ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்தால், எல்லாம் மாறி சிறப்பாக அமையும் என நான் நினைக்கிறேன். பவர்பிளேவில் நாங்கள் சுறுசுறுப்பாக இல்லை, அந்த நேரத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம் என்றால் நிச்சியமாக வெற்றி பெற்றிருக்கலாம். 180 ரன்கள் துரத்தக்கூடிய இலக்கு என்று நினைத்தேன். ஆடுகளம் இன்னும் நன்றாக இருந்தது.

பந்தை சரியாக டைம் செய்தால், ரன்கள் எடுக்கலாம். பவர்பிளேவில் அவர்கள் 79 ரன்கள் எடுத்தபோது, 220-230 வரை செல்லும் என நினைத்தேன். ஆனால், சிறப்பாக பந்துவீசி தடுத்துவிட்டோம். தோல்விக்கு காரணம் எங்களுடைய பேட்டிங் தான். இறுதியில் ஒரு பெரிய ஷாட் அடித்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் தேவை, ஃபீல்டிங்கில் தவறுகளை குறைத்தால், அடுத்த போட்டிகளில் சிறப்பாக வருவோம்.

முன்பு எங்களுடைய அணியில் அஜிங்க்யா மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார், ராயுடு மிடில் ஆர்டரை கையாள்வார். மிடில் ஓவர்களை கவனித்துக் கொள்ள நான் கொஞ்சம் தாமதமாக வந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம், திரிபாதி டாப் ஓவரில் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்ய முடியும். எப்படியிருந்தாலும், மூன்று போட்டிகளில் ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய எனக்கு வாய்ப்பு கிடைப்பதால் அந்த இடமே சரியாக தான் இருக்கும் என இறங்குகிறேன்.

ஏற்கனவே ஒரு முறை தோல்வி அடைந்தோம் அடுத்ததாக மீண்டும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தோம் என்பது வேதனையாக தான் இருக்கிறது.” எனவும் ருதுராஜ் கூறியுள்ளார். பேசும்போதே வேதனையுடன் ருதுராஜ் பேசிய காரணத்தால் அவர் தோல்விகளால் எந்த அளவுக்கு அப்செட்டாக இருக்கிறார் என்பது அவருடைய முகத்திலே தெரிந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்