டி20 தொடரில் புறக்கணிக்கப்பட்ட மூத்த வீரர்கள்..! யார் யார் தெரியுமா..?

ஆசிய கோப்பை விளையாடிய அணி:

உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உலகக்கோப்பைக்கு முன் விளையாடிய ஆசிய கோப்பை அணிகளில் இருந்து மாற்றங்களைச் செய்யாமல் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற ருதுராஜ் கெய்க்வாட், முதல் மூன்று டி20 போட்டிகளில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி 2 டி20 போட்டிகளில்  துணைக் கேப்டனாக அணியில் சேர உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டி20 ஐ அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, உலகக் கோப்பையின் போது ஏற்பட்ட காயம் காரணமாக  இந்த டி20 ஐ தொடரில்அவர் விளையாடவில்லை.

மூத்த வீரர்கள் புறக்கணிப்பு:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பெரும்பாலான மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்தத் தொடருக்கான இளம் அணியை அறிவித்ததுள்ளது எனவும் இந்த தொடரில்  யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குழு அணியில் சேர்க்கவில்லை. இதற்கு முன் நடந்த 2023 ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றிலும் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அவேஷ் கான்., முகேஷ் குமார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay